"4 வயதுக்கு உட்பட்ட பிள்ளைகளுக்கான கற்கை வாய்ப்பு" சூரிச் மாநில கல்வித்தினைக்களத்தின் ஒரு திட்டமாகும்.
பெற்றோர் மற்றும் நிபுணர்களுக்கான படங்கள்
இப் படங்கள், இரண்டு தொடக்கம் நான்கு நிமிடங்கள் நீளம் கொண்டது, அத்துடன் 13 மொழிகளில் உள்ளது. இவை சுவிஸ் நாட்டு ஆட்சி மொழிகளிலும்(டொச், பிரெஞ்ச், இத்தாலி, றுமான்ஞ் கிறிஸ்யுண்) அத்துடன் அல்பாணி, அரபு, ஆங்கிலம், போர்த்துக்கல், செர்பிய-கொறாரிய-பொஸ்ணிய, ஸ்பானிய, தமிழ், ரிக்னீறிய மற்றும் துருக்கி ஆகிய மொழிகளிலும் உள்ளது.
இப் படங்கள் பெற்றோர் மற்றும் சிறு பிள்ளைகள் பராமரிப்பாளரை சென்றடைய வேண்டும், அதேவேளை சிறுபராயத்தில் கல்வி, பராமரிப்பு மற்றும் வளர்ப்புமுறை பற்றிய நிபுணர்களையும் சென்றடைய வேண்டும். அவர்கள் உத்வேகம், ஒரு ஆதரவாக இருக்க வேண்டும். அவர்கள் அன்றாட வாழ்க்கையில், சிறுவர் கல்விக்கட்டத்தை இனங்கண்டு, தகவலளித்து மற்றும் தூண்டுதலாகவும் செயற்பட வேண்டும்.
படங்கள் பாகங்கள் 2014 மற்றும் 2019
சூரிச் மாநில கல்வித் தினைக்களம் முதல் தடவையாக, 2014 ஆம் ஆண்டு, அன்றாட வாழ்க்கையில், 4 வயதுக்கு உட்பட்ட பிள்ளைகள் கற்றுக் கொள்ளும் சந்தர்ப்பங்கள் எனும் குறும் படத்தை வெளியிட்டது. சிறுபராயத்தில் மொழிக்கல்வி படங்கள் முதல்ப் பாகத்தோடு இணைகின்றது. இங்கு முழுவதுமாக இளம் பராயத்தில் கல்வி பற்றிய 65 படங்கள் உள்ளன. அத்துடன் பிள்ளைகளின் மொழி ஆற்றலை வளர்த்துக் கொள்வதற்காக புதிதாக ஆறு கருத்து படங்கள் இணைத்துக் கொண்டுள்ளப்பட்டது.
தொடர்பு
சுவிஸ் UNESCO அமைப்பு மற்றும் குழந்தைகள் பராமரிப்பு வலயம் சுவிஸ், ஆகியவை குறிப்பிடும், சிறுபராயத்தில் கல்வி, பராமரிப்பு மற்றும் வளர்ப்பு ஆகிய ஒழுங்கு கட்டமைப்பு (2012) செயற்பாட்டுக்கு கட்டுப்பட்டு கற்றல் வாய்ப்புக்கள் 2014 குறும்படங்கள் உருவாக்கப்பட்டுள்ளது. சூரிச்மாநில கல்வித்தினைத்களத்தின் பணிப்புக்கு அமைய "" சிறுபராயத்திலேய மொழிக்கல்வி"" 2017 குறும்படங்களை துறைசார் அமைப்புக்களான ஆசிரியர் பல்கலைக்கழகம் துர்கவ் மற்றும் மறி மையர்கோவ் நிறுவனம் இணைந்து உருவாக்கியுள்ளார்கள்.
தொடர்பு
சிறு பிள்ளைகளின் பெற்றோர் மற்றும் பராமரிப்பாளர்களுக்காக: உங்களிடம் ஏதாவது கேள்விகள் இருந்தால், பெற்றோருக்கான ஆலோசனை நிலையத்தை நாடுங்கள்: உ+ம்: தாய் தந்தை ஆலோசனை, பிள்ளைகள் வளர்ப்பு ஆலோசனை அல்லது பெற்றோர் கல்வி. நீங்கள் இங்கே இந்த இடங்களைக் காணலாம்:
www.kjz.zh.ch/angebote-4
இளம் பராயக் கல்வி, பராமரிப்பு மற்றும் வளர்ப்பு நிபுணர்கள்: மேற்படிப்பு வாய்ப்புக்கள் பற்றிய தகவல்களை இங்கே காணலாம்:
www.bfs-winterthur.ch/weiterbildung
படங்கள் பற்றிய ஆலோசனை மற்றும் விபரங்கள்:
info@kinder-4.ch
பரிமாற்றம் மற்றும் ஒத்துழைப்பு
”4 வயது வரையிலான குழந்தைகளுக்கான கற்றல் வாய்ப்புகள்” என்ற திட்டத்தைக் கொண்டு, குழந்தைப்பருவத்தின் தொடக்கநிலை மேம்பாட்டுக்கான ஒரு நடைமுறையிலான பங்களிப்பைச் செய்ய Bildungsdirektion des Kantons Zürich விரும்புகிறது. மேலும், இது பின்வரும் பல்வேறு நிறுவனங்கள் மற்றும் அமைப்புகளுடன் கூட்டிணைந்தும், பரிமாறிக்கொண்டும் இதை மேற்கொண்டுள்ளது:
Kanton Zürich (kjz) - இல் உள்ள குழந்தை மற்றும் இளைஞர் ஆதரவு மையங்கள்
மாகாணத்தின் அனைத்துப் பகுதிகளிலும் உள்ள குழந்தைகளின் பெற்றோர்கள், இங்கு தனிப்பட்ட கலந்தாய்வு மற்றும் நடைமுறை ஆதரவைக் கண்டறிவார்கள்.
பெற்றோர் கல்வி Kanton Zürich, Elternbildung Schweiz
பெற்றோர் கல்வியானது வழிகாட்டுதலையும், நடைமுறை ஆதரவையும் வழங்குகிறது.
Marie Meierhofer Institut für das Kind (MMI)
MMI - ஆனது 1957 முதல் குழந்தைகள் மற்றும் அவர்தம் குடும்பங்களின் நல்வாழ்விற்காகப் பொறுப்பேற்றுக் கொண்டு செயல்பட்டு வருகிறது: இது குழந்தைகள், பெற்றோர்கள் மற்றும் தொழில் வல்லுநர்களுக்கு மட்டுமின்றி, கல்வி, நடைமுறை ஆதரவு மற்றும் இன்னும் பலவற்றுக்கான சேவைகளை வழங்குகின்றது.
சுவிஸ் UNESCO ஆணையம் மற்றும் Netzwerk Kinderbetreuung
Orientierungsrahmen für frühkindliche Bildung, Betreuung und Erziehung - ஐ கொண்டு, இந்த இரண்டு அமைப்புகளும் 4 வயது வரையிலான சிறிய குழந்தைகளின் பராமரிப்புக்காக மதிப்புவாய்ந்த கல்விசார் அடிப்படையை வெளியிட்டுள்ளது.
Lotteriefonds Zürich, Jacobs Foundation Schweiz மற்றும் Stiftung Mercator Schweiz
இந்த மூன்று அமைப்புகளும் நம்முடைய சமுதாயத்தின் கூட்டிணைவு மற்றும் மேம்பாட்டிற்கான முக்கியப் பங்களிப்புகளைச் செய்கின்றன. கற்றல் வாய்ப்புகள் திட்டமானது, இந்த அறக்கட்டளைகளின் நிதி ஆதரவால் செயற்படுத்தப்பட்டுள்ளது.
Berufsfachschule Winterthur
Kanton Zürich - இல் உள்ள BFS Winterthur - ஆனது, குழந்தைப்பருவத்தின் தொடக்கக்காலப் பராமரிப்பு மற்றும் கல்வி புகட்டுவதில் பணிபுரிகின்ற தொழில் வல்லுநர்களின் கல்வி மற்றும் பயிற்சிக்கு ஒரு முக்கியமான வழியில் பங்களிக்கின்றது.
kibesuisse – Verband Kinderbetreuung Schweiz
இது பகல்நேரப் பராமரிப்பு மற்றும் பகல்நேரப் பராமரிப்புக் குடும்பங்களுக்கான தேசியக் கூட்டமைப்பாகும். இது குழந்தைப் பராமரிப்பில் உள்ள தரநிலைகளை வரையறுத்து, அவற்றை நடைமுறைப்படுத்துவதற்குச் செயல்புரிகின்றது.
IG Spielgruppen Schweiz
ஒரு மைய மதிப்பைக் கொண்ட IG-ஆனது, தொழில்முறையிலான மழலையர் பள்ளிப் பணிக்கான நடைமுறை ஆதரவை வழங்குகின்றது.
SSLV Schweizerischer Spielgruppenleiterinnen Verband
ஒரு தொழில்முறை அமைப்பான SSLV, சுவிட்சர்லாந்து முழுவதுமுள்ள மழலையர் பள்ளி ஆசிரியர்களின் தேவைகள் மற்றும் ஆர்வங்களை வலியுறுத்திப் பிரச்சாரம் மேற்கொண்டுள்ளது.
SIKJM Schweizerisches Institut für Kinder- und Jugendmedien, Family Literacy
இது குழந்தைகள் மற்றும் இளைஞர் ஊடகத்திற்கான சுவிஸின் மைய மேன்மையாகும். இது வழங்கும் சலுகைகளில் இருந்து ஆர்வமுள்ள பெற்றோர்கள் இலாபத்தையும் பெறலாம்.
A:primo
ஒரு இலாபநோக்கற்ற கூட்டமைப்பான A:primo, சமூகரீதியாக ஆதரவற்ற குழந்தைகளின் மேம்பாட்டிற்கு ஆதரவளிக்கிறது. சுவிட்சர்லாந்தில், விளையாட்டுகள் மற்றும் பயிற்சிகளை உள்ளடக்குகின்ற ”schritt:weise” என்ற திட்டத்தை A:primo வழங்குகின்றது.
Caritas
வறுமையில் வாடும் குடும்பங்களுக்கு கல்வியைப் பெறுவதற்கான அணுகலை வழங்குகின்ற பலவகையான திட்டங்களை Caritas வழங்குகின்றது.
Pro Juventute
பெற்றோர்கள் மற்றும் குழந்தைகளை பலவகையான சலுகைகளுடன் Pro Juventute ஆதரிக்கின்றது. உதாரணமாக, குழந்தை பிறந்ததில் இருந்து அதன் தொடக்கக்கால மேம்பாடு வரையிலான தகவல்களை உள்ளடக்கிய கடிதங்களை இது பெற்றோர்களுக்காக வெளியிடுகிறது.
FemmesTische
உடல்நலம், குழந்தை வளர்ப்பு மற்றும் நோய்த்தடுப்பு குறித்த பெண்கள் உரையாடல் – இது Kanton Zürich மற்றும் சுவிட்சர்லாந்தின் பிற பகுதிகளில் உள்ள பெண்களுக்கான ஒரு வெளிப்படையான உதவித் திட்டமாகும்.
Zeppelin – familien startklar
இந்த ஆலோசனை நிலையம் குறிப்பாக 0 தொடக்கம் 3 வயது வரையிலான பிள்ளைகள் இருக்கும் குடும்பத்தினருக்கு சுமைகள் தோன்றும் வேளைகளில் ஆதரவாகவும் வலுப்படுத்துவதாகவும் செயற்படுகிறது
conTAKT-kind.ch
conTAKT-kind.ch எனும் திட்டத்தின் நோக்கம், குறிப்பாக சுவிஸில் குடியேறி இருக்கும் பெற்றோர்களின் பிள்ளை வளர்ப்பு விடயங்களில், உணரவைத்தல் ஆகும்.
திட்டப்பணி பங்குதாரர்
கல்வி ஆணையத்தின் திட்டம் சூரிச்மாநிலம
ஆதரவுடனும்
கூட்டுழைப்புடனும்
Frühe Sprachbildung 2019
Lotteriefonds Kanton Zürich; Stiftung Mercator Schweiz; Marie Meierhofer Institut für das Kind Zürich, Pädagogische Hochschule Thurgau, Netzwerk Kinderbetreuung Schweiz
Lerngelegenheiten 2014
Lotteriefonds Kanton Zürich; Jacobs Foundation; Stiftung Mercator Schweiz; Viktor Dürrenberger-Stiftung Zürich; Marie Meierhofer Institut für das Kind Zürich; Partnerprojekt des Orientierungs-rahmens für frühkindliche Bildung, Betreuung und Erziehung der UNESCO-Kommission und des Netzwerks Kinderbetreuung Schweiz.